ads

இந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க

சூப்பர் ஸ்டாரின் காலா படம் அடுத்த மாதம் ஜூன் 15இல் வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டாரின் காலா படம் அடுத்த மாதம் ஜூன் 15இல் வெளியாக உள்ளது.

தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து புதிய படங்களுக்கான வெளியீடுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி நாளை முதல் தமிழகத்தில் 'மெர்குரி' படம் அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது. ஸ்ட்ரைக்கிற்காக நிறுத்தப்பட்ட அனைத்து படப்பிடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போன்றவையும் நாளை முதல் தொடங்கவுள்ளது.

ரசிகர்களிடையே ஸ்ட்ரைக்கின் போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' படம் சொன்னபடி ஏப்ரல் 27-இல் வெளியாகுமா என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடித்ததால் காலா படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து 'காலா' படம் அடுத்த மாதம் ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 15-இல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தயாரிப்பாளர் ஸ்ட்ரைக்கால் புதிய படங்களின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தற்போது ஏராளமான படங்கள் அடுத்த 2 மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்த வரிசையில் காலா, விஸ்வரூபம் 2, இரும்பு திரை, டிக் டிக் டிக், கரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், மிஸ்டர் சந்திரமௌலி, கீ, காளி, கோலி சோடா 2, பக்கா, செம போன்ற படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க