ads

சூப்பர் ஸ்டாருக்கு நல்ல அரசியல் கதையை உருவாகியுள்ள கார்த்திக் சுப்பராஜ்

ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் அரசியல் கதை கொண்டதாகவும் அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் அரசியல் கதை கொண்டதாகவும் அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரைக்கதை அமைப்பாளராகவும் சில படங்களில் பணிபுரிந்துள்ளார். 67 வயதை கடந்தாலும் உலகம் முழுவதும் இவருடைய படங்களுக்கு இருக்கும் ரசிகர்களின் வரவேற்புகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி 'காலா' படம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2.0 படமும் வெளிவருவதாக கூறப்படுகிறது. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் ஐபிஎல் பைனலில் வெளியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதுவும் வதந்தியாகவே போய் விட்டது. இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்துள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் ரஜினிகாந்த் அரசியல், சினிமா இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூகத்தில் தற்போது அரசியல் காரணங்களால் நடந்து கொண்டிருக்கும் அவலங்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். விரைவில் அரசியல் கட்சியையும் துவங்க உள்ளதால் அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்துக்கு நல்ல அரசியல் படம் அமைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பி வந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள படம் அரசியல் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ், ரஜினிகாந்திடம் கதை கூறியதாகவும் அது அவருக்கு பிடித்து போக படப்பிடிப்பை துவங்கலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வார இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்கவுள்ளனர். தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தேர்வு படக்குழுவிற்கு சவாலாக உள்ளது. காலா இசை வெளியீட்டு விழாவில் மகள் வயது பெண்ணுடன் டூயட் பாடமாட்டேன் என்று தெரிவித்துள்ளதால் அவருடைய வயதிற்கேற்றவாறு முன்னாள் நாயகிகளை அணுகி வருகின்றனர். முன்னதாக தீபிகா படுகோனே, த்ரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் பிறகு தற்போது சிம்ரன் போன்ற முன்னாள் நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாருக்கு நல்ல அரசியல் கதையை உருவாகியுள்ள கார்த்திக் சுப்பராஜ்