ads

ஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்துவரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள காலா படத்தில் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்துவரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள காலா படத்தில் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகம் முதல் லண்டன் வரை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும், அதில் பலியான 13 பொது மக்களும் காரணமாக அமைகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டத்தின் கலவரங்கள், உயிரிழப்புகள் அடுத்தடுத்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்னும் 10 நாட்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் நிலவி வரும் சூழ்நிலையில் காலா படத்தை வெளியிடுவது நன்றாக இருக்காது என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார்.

இதனால் காலா படத்தின் வெளியீடு தேதியை தள்ளி வைக்க தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் காலா படம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் காலா படத்தை திரையிட்டால் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்ப வாய்ப்புள்ளது. இதனால் காலா படம் மீண்டும் தள்ளிப்போக அதிகளவு வாய்ப்புள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா