சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு

       பதிவு : May 05, 2018 16:48 IST    
ரஜினிகாந்தின் காலா இசை வெளியீடு சென்னையில் வரும் மே 9-ஆம் தேதி நடைபெற உளள்து. ரஜினிகாந்தின் காலா இசை வெளியீடு சென்னையில் வரும் மே 9-ஆம் தேதி நடைபெற உளள்து.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படத்திற்கு பிறகு அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'காலா'. இந்த படத்தையும் கபாலி படத்தை இயக்கிய பா ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் 27அன்றே வெளியாக இருந்த இந்த படம் தயாரிப்பாளர் பிரச்னை காரணமாக தள்ளி போனது. தயாரிப்பாளர் பிரச்னை முடிந்த பிறகு இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்தது.

இதன் பிறகு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலின் சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. வரும் மே 9-ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சிகிச்சைக்காக அமேரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று திரும்பியுள்ளார். இது தவிர இந்த இசை வெளியீட்டு விழா பேஸ்புக், ட்வீட்டர், போன்ற சமூக வலைத்தளங்களில் நேரலையாக ரசிகர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தனது அரசியல் குறித்த அறிவிப்பையும் அறிவிக்க உள்ளதாக ஒரு புறம் தகவல் பரவி கொண்டு வருகிறது


சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்