கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்

       பதிவு : Jun 09, 2018 11:33 IST    
ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகும் புது படத்தில் ரஜினி பேராசிரியராக மாறியுள்ளார். ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகும் புது படத்தில் ரஜினி பேராசிரியராக மாறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் படம் காலா. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தை வைத்து வெளியாகியுள்ள இந்த படம் ரஜினிக்கு நல்ல ஆதரவை அளித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்புகள் முன்னதாகவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் படக்குழு களமிறங்கியுள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ராக் ஸ்டார் அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை டேராடூனில் படக்குழு துவங்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தன்னுடைய நரைத்த தாடியை கறுப்பாகியுள்ளார் ரஜினி. கபாலி, காலா படத்தில் கேங்ஸ்டராக தன்னுடைய வயதிற்கேற்றவாறு நடித்திருந்த நிலையில் அடுத்த படத்திற்காக இளமையாக மாறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

 

டேராடூனை தொடர்ந்து டார்ஜிலிங், இமாலயாஸ் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். ரஜினி சமீபத்தில் தான் ஆன்மீக பயணம் காரணமாக டேராடூன் இமயமலையை சென்று சுவாமிகளை தரிசித்து வந்தார். இதன் பிறகு மீண்டும் தன்னுடைய பழக்கப்பட்ட இடத்தில் படப்பிடிப்பை துவங்குவது ரஜினிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இந்த படத்தில் ரஜினி பல கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாகவும், கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் தர்மத்தின் தலைவன் படத்தை போன்று மீண்டும் கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே தன்னுடைய கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஒவ்வொருவரின் நடிப்பும் எதார்த்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைலும், அவருடைய பாவனையும் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தில் உபயோகப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Photo Credit - @sunpictures (Twitter)Photo Credit - @sunpictures (Twitter)

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்