சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு

       பதிவு : Mar 24, 2018 11:05 IST    
ரகுல் ப்ரீத் சிங் சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ரகுல் ப்ரீத் சிங் சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. சமூகத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் கொள்ளைகளை மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு இந்த படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீம ராஜா' படத்திலும், அடுத்ததாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமாக உருவாகவுள்ள பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீம ராஜா' படத்தில் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.

 

ஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா ஆகியோரை தொடர்ந்து தற்போது ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவல் முன்னதாக வெளியான நிலையில் இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை தற்போது 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்திகேயனின் வேலைக்காரன், சீம ராஜா படத்தை தொடர்ந்து ஆர் ரவிக்குமார் இயக்க உள்ள புது படத்தையும் தயாரிக்க உள்ளது.

இவர் முன்னதாக அறிவியல் சார்ந்த படமான 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்த படமும் அறிவியல் சார்ந்த ஏலியன் கதையாக உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அறிவியல் விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான் மற்றும் ஆர் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர். இதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.

 


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்