ads

தெலுங்கு ரீமேக்கில் ஈடுபடும் ஆர்கே.சுரேஷ்

rk suresh remake telugu movie

rk suresh remake telugu movie

'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆர்கே.சுரேஷ் அதனை அடுத்து தர்ம துரை, ஹர ஹர மகாதேவகி, இப்படை வெல்லும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக முன்னனி நடிகர்களின் ஒருவரான விக்ரம் நடிப்பில் வெளிவர உள்ள ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நாயகனாக தனி முகம், பில்லா பாண்டி, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

ஆனந்த் ரவி இயக்கத்தில் ரவிவர்மா, கோமலி நடிப்பில் தெலுங்கில்  வெளிவந்த படம் 'நெப்போலியன்'. இந்த படம் கடந்த மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணியில் தற்பொழுது ஆர்கே. சுரேஷ் ஈடுபட்டு வருகிறார்.ஆர்கே. சுரேஷுக்கு சொந்தமான ‘ஸ்டுடியோ-9' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அதிகளவு பொருள் செலவில் எடுக்கவுள்ள இப்படத்தில் நடிகர்-நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் நாயகனாக நடிகர் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது..    

தெலுங்கு ரீமேக்கில் ஈடுபடும் ஆர்கே.சுரேஷ்