ads

ரஜினிகாந்த் கமல் ஹாசன் படங்களுக்கு இசையமைப்பாளரான அனிருத்

சூப்பர் ஸ்டார் படத்தை தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தை தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான அனிருத் இசையமைப்பில் இதுவரை 19 படங்கள் வெளிவந்து இன்று வரையிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இவருடைய இசையமைப்பில் வரும் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களின் ரிங் டோனாகவே மாறி வருகிறது. மெலடியாக இருந்தாலும் சரி, குத்து பாடலாக இருந்தாலும் சரி அனிருத் எப்பவுமே ராக் ஸ்டார் தான். இவருடைய இசையமைப்பில் இறுதியாக தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு கோலமாவு கோகிலா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இவருடைய இசையமைப்பில் கோலமாவு கோகிலா படத்தின் எதுவரையோ, கல்யாண வயசு போன்ற பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க உள்ளார். முதன் முறையாக ரஜினிகாந்த் படத்தில் அனிருத் இணைந்துள்ள இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளது.

இந்நிலையில் அனிருத் அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், காமெடி நடிகராக வடிவேலுவும் நடிக்க உள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

ரஜினிகாந்த் கமல் ஹாசன் படங்களுக்கு இசையமைப்பாளரான அனிருத்