ads

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகியதாக வதந்தி - படக்குழுவினர்

kanchana 3 movie oviya is not quit

kanchana 3 movie oviya is not quit

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக பணிபுரிந்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு, விளம்பர நிகழ்ச்சி, கடை திறப்பு என்று பிசியாக வலம் வருகிறார். இவர் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் 'காஞ்சனா 3' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதனை காஞ்சனா 3 படக்குழு மறுத்துள்ளது. 

காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்சுடன் ஓவியா இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஓவியா காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகியதாகவும் இதனால் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது புகார் செய்துள்ளதாகவும் தவறான செய்தியை பரப்புகின்றனர். படப்பிடிப்பிற்கு நடிகை ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எதனால் இப்படி தவறான தகவலை பரப்புகின்றனர் என்று தெரியவில்லை என்று படக்குழு மறுத்துள்ளது.

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகியதாக வதந்தி - படக்குழுவினர்