பிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி

       பதிவு : Mar 23, 2018 10:28 IST    
இசையமைப்பாளர் அனிருத், லேடி கெட்டப்பில் இருப்பதாகவும், நயன்தராவிற்கு ஜோடியாக நடிப்பதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத், லேடி கெட்டப்பில் இருப்பதாகவும், நயன்தராவிற்கு ஜோடியாக நடிப்பதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் வெளியான முதல் படம் நடிகர் தனுஷின் '3'. இந்த படத்தை அவருடைய நெருங்கிய உறவினரான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருந்தார். தனது முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனிருத், தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய சிறப்பான இசையமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவருடைய இசையமைப்பில் இறுதியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன் போன்ற படங்கள் இவருடைய இசையமைப்பில் திரையரங்கு அதிர வைத்தது. இந்த படங்களை தொடர்ந்து இவர் தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்திற்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ள புது படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

 

இந்நிலையில் சமீபத்தில் பிரபல மாடல் அழகி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனிருத் லேடி கெட்டப்பில் நடிப்பதாக தகவல்கள் பரவியது. இந்த செய்தியறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது 'கோலமாவு கோகிலா' படத்தில் அனிருத் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மறுத்துள்ளார்.

இந்த படத்தின் கதை அனிருத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் இவர் தன்னுடைய சிறப்பான இசையமைப்பை இந்த படத்திற்கு அளித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் அவர் மறுத்துள்ளார்.

 

அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக நினைத்த மாடல் அழகிகள் புகைப்படங்கள்.அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக நினைத்த மாடல் அழகிகள் புகைப்படங்கள்.
அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக நினைத்த மாடல் அழகிகள் புகைப்படங்கள்.அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக நினைத்த மாடல் அழகிகள் புகைப்படங்கள்.

பிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்