கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறாரா..நவாசுதீன் தரப்பில் விளக்கம்

       பதிவு : Apr 11, 2018 14:44 IST    
தற்போது பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு நவாசுதீன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு நவாசுதீன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், 2012 முதல் திரைத்துறையில் இயக்குனராக வலம் வருகிறார். இரண்டு ஆண்டுக்கு ஒருபடம் என தரமான படங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். இவருடைய இயக்கத்தில் 'இறைவி' படத்திற்கு பிறகு 'மெர்குரி' படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிரபு தேவா நடிப்பில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

த்ரில்லர் படமான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை பக்க பலமாக அமைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப வரும் ஏப்ரல் 13-இல் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.

 

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தேர்வு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னதாக விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் படத்தில் தமிழ் திரையுலகிற்கு நவாசுதீன் சித்திக் அறிமுகமாகிறார் என கூறப்பட்டது. ஆனால் இதனை நடிகர் நவாசுதீன் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர்கள் அறிவிப்புக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் சூப்பராஜ், நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளார்.


கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறாரா..நவாசுதீன் தரப்பில் விளக்கம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்