ads

காலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்

விசுவாசம் படத்தில் அண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் தம்பிக்கு ஜோடியாக சாக்சி அகர்வால் நடிக்க உள்ளார்.

விசுவாசம் படத்தில் அண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் தம்பிக்கு ஜோடியாக சாக்சி அகர்வால் நடிக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை சாக்சி அகர்வால் நடித்துள்ளார். மாடல் அழகி மற்றும் நடிகையான இவர் அதிகப்படியான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், ககக போ, ஜெயிக்கிற குதிரை போன்ற படங்களில் சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பிறகு தற்போது தல அஜித்தின் விசுவாசம் படத்திலும் இணைந்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் இரட்டை வேடங்களில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது ஐதராபாத்தில் நடந்த வரும் படப்பிடிப்பு அடுத்ததாக மும்பையில் நடைபெற உள்ளது.

அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் அண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தம்பிக்கு ஜோடி யார் என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது சாக்சி அகர்வால் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார். கிராமத்து பின்னணியில் வீரம் படத்தை போன்று உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் படத்தின் ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தீம் சாங்கும் ரெடியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்