ads

ஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நிகழ்ந்து வருகிறது.

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நிகழ்ந்து வருகிறது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 'விவேகம்' படத்திற்கு பிறகு தற்போது உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. இந்த படத்தையும் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். தொடர்ந்து சிவா கூட்டணியில் அஜித் நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு தற்போது ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் முன்னதாக வெளிவந்த வீரம் படத்தை போன்று கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. முன்னதாக தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்ததால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி துவங்கப்படும் என்று அறிவித்தனர்.

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி நகரில் ஓப்பனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கியுள்ளனர். அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை தல தீபாவளியாக இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு