ads
சமந்தாவின் அடுத்த பட தகவல்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 12, 2017 19:02 ISTபொழுதுபோக்கு
முன்னணி நடிகைகளின் ஒருவரான சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமந்தா தற்பொழுது பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருவதோடு தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கிராமத்து தொடரை மையமாக வைத்து உருவாகி வரும் 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா முழுவதுமாக கிராமத்து பெண் தோற்றத்தை உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா ஒரு கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த ஆண்டு பவன் குமார் இயக்கத்தில் கன்னட திரையுலகில் வெளிவந்து வெற்றியை பெற்ற 'யு டர்ன்' படத்தினை தற்பொழுது தமிழ் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த ரீமேக் படத்தில் சமந்தா நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.