ads

விவசாயம் சார்ந்ததாக உருவாகும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை

samuthirakani new movie title vellai yaanai

samuthirakani new movie title vellai yaanai

தமிழ் திரையுலகின் திரைப்பட இயக்குனர், நடிகர், தொலைக்காட்சி நாடக இயக்குனர் போன்ற திறமைகளை கொண்ட சமுத்திரக்கனி தற்பொழுது படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஏமாளி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடந்து நாடோடிகள் 2, கோலி சோடா 2, சங்கத்தலைவன், காலா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.      

இதனை அடுத்து சமுத்திரக்கனி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 'வெள்ளை யானை' என்ற புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் சுப்ரமணியன் சிவா இயக்குகிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'திருடா திருடி' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின்னர் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் சிறந்த இயக்குனராக வளம் வந்தார். தற்பொழுது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் 'வெள்ளை யானை' என்ற படத்தினை விவசாயத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் உருவாகி வருகிறார். மேலும் இந்த படத்தினை 'மினி ஸ்டூடியோ' சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விவசாயத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் உருவாக்கவிருப்பதால்  படத்திற்கான போட்டோ ஷூட்டை ஸ்டுடியோவில் எடுக்காமல் தஞ்சை பகுதியில் வயல் வெளி சார்ந்த இடத்தில் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் இருந்தே படப்பிடிப்புகளும் துவங்கப்பட்டது. இந்த படத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளியாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் இணையவிருக்கும் நடிகை மற்றும் இதர நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

விவசாயம் சார்ந்ததாக உருவாகும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை