ads
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை - நடிகர் சசிகுமார் பேட்டி
விக்னேஷ் (Author) Published Date : Nov 22, 2017 12:20 ISTபொழுதுபோக்கு
நடிகர், இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார். இவர் திரைப்பட துறையில் சசிகுமார் படங்களில் இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். இவர் ஈசன், போராளி, தாரை தப்பட்டை, சுப்ரமணியபுரம், நாடோடிகள் மற்றும் சசிகுமார் நடித்து வெளிவர உள்ள கொடிவீரன் போன்ற படங்களில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசோக் குமார் நேற்று (21.11.17) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒரு கடிதத்தில் தற்கொலை செய்வதற்கான காரணத்தை அதில் எழுதியுள்ளார். அசோக் குமாரின் இந்த மரணம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் மனவருத்தத்துடன் பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளிக்கும் போது, அசோக் குமார் எனக்கு நிழலாக இருந்தவர், என்னுடன் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். நான் நடித்த கொடிவீரன் படம் வெளிவரும் நேரத்தில், கடன் தொல்லையின் காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார்.