ads
அகரம் அறக்கட்டளைக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கிய 'சத்யா' படக்குழு
புருசோத்தமன் (Author) Published Date : Dec 14, 2017 19:24 ISTபொழுதுபோக்கு
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனமானது 2006-இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வியை கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சமூகத்திலுள்ள நடக்கும் தீமைகளை அகற்ற கல்வி மிக சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையில் அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை முதன் முதலாக +2 படித்த மாணவர்களின் மேற்படிப்பிற்கு நிதிஉதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. 2012இல் அகரம் பவுண்டேஷன் 500க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம் நாட்டின் பொறுப்பான குடிமக்களாக உருவாக்க அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்க தொடங்கியது.
ஏற்கனவே சூர்யாவின் தந்தை- நடிகர் சிவகுமார் 1979 இல் நிறுவிய “சிவகுமார் கல்வி அறக்கட்டளை” மூலம் மேல்நிலை தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளாக அவர் செய்து வந்த சேவையை தற்போது அவரது மகன்களான சூர்யா சிவகுமார் மற்றும் கார்த்தி சிவகுமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சூர்யாவின் இந்த அறக்கட்டளைக்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், சமூக அமைப்பினர் தங்களது நிதியுதவியை அளித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சத்யா' படக்குழு இணைந்து தங்களது பங்காக அகரம் அறக்கட்டளைக்கு 3 லட்சத்தை வழங்கியுள்ளது.