ads

நடிகர் சிபி சத்யராஜை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்

suseenthiran wishes sibiraj

suseenthiran wishes sibiraj

'கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு பிறகு சிபிராஜ், 'சைத்தான்’ புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 'சத்யா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படம் இன்று வெளியிடப்பட்டது. சிபியின் தந்தை  சத்யராஜ் அவருக்கு சொந்தமான  ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

இப்படம் ரவிகாந்த் பிரபு இயக்கத்தில் 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'க்ஷணம்' படத்தை தழுவியது. இந்த படம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்ததின் காரணத்தினால்  இப்படத்தினை தமிழ் ரீ மேக் செய்யும் உரிமையை பெற்று 'சத்யா' என்ற தலைப்பில் படத்தினை தயாரித்து இன்று வெளியிட்டனர்.   

இந்த படத்தினை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் பின்வருமாறு அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.  "சிபிசத்யராஜ் நடிப்பில் இன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்காரு.....நேற்று நைட்டு இந்த படத்தை பார்த்தேன். நாய்கள் ஜாக்கிரதை-க்கு பிறகு எனக்கு சிபியோட நடிப்பில் பிடிச்ச படம். இந்த படத்தோட முழு பலமும் இந்த படத்தோட திரைக்கதை...இந்த படம் சிபிக்கு இன்னொரு வெற்றி படம்....இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்" என்று அவரது பதிவில் வெளியிட்டுள்ளார்.        

             

நடிகர் சிபி சத்யராஜை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்