நடிகர் சிவகார்திகேயனுக்காக மெலடி பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்

       பதிவு : Feb 23, 2018 09:46 IST    
Singer Shreya Ghosal sung melody song in music director D Imman composing Singer Shreya Ghosal sung melody song in music director D Imman composing

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சூரி, இயக்குனர் பொன்ராம் ஆகியோரது கூட்டணியில் 'சீமராஜா' படம் கலகலப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் இமான் மூன்றாவது முறையாக இசையமைத்து வருகிறார். முன்னதாக வெளிவந்த இரு படங்களுக்கு இவருடைய இசை படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. 'பாக்காத பாக்காத' மற்றும் 'உன் மேல ஒரு கண்ணு' போன்ற மெலடி பாடல்களை போன்று தற்போது உருவாகி வரும் 'சீமராஜா' படத்திற்கும் ஒரு மெலடி பாடல் உருவாகி உள்ளதாக இமான் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

இந்த பாடலை பிரபல பாடகரான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தொடர்ந்து மெலடி பாடல்களை இசையமைக்க வாய்ப்பு தந்த இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சிம்ரன், நெப்போலியன், லால், மனோபாலா, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்து வருகிறார். முன்னதாக இவர் சுந்தர் சியின் 'ஐந்தாம் படை' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

மேலும் இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவிக்க உள்ளனர்.


நடிகர் சிவகார்திகேயனுக்காக மெலடி பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்