அனுஷ்காவை பாராட்டிய முன்னணி நடிகர்

       பதிவு : Dec 10, 2017 17:39 IST    
sivakumar wishes anushka sivakumar wishes anushka

அனுஷ்கா தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் இவரின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது. இதனை தொடர்ந்து அசோக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள 'பாக்மதி' படத்தில் நடித்து வந்துள்ளார். இந்த படத்தின் பஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.     

 இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் நாகார்ஜுனா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'ஓம் நமோ வெங்கடேசாய' பக்தியை மையமாக கொண்டு எடுத்துள்ள இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக  நடித்திருந்தார். இந்த படம் தற்பொழுது தமிழில் 'அகிலகோடி பிரம்மாண்ட நாயகன்' என்ற தலைப்பில் டப் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படத்தினை பார்த்த நடிகர் சிவகுமார்  அனுஷ்காவிற்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில், படம்  சுவாரசியமுன், விறுவிறுப்பும், ஆட்சர்யங்களும் கலந்து ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதாகவும், படத்தினை பார்த்ததும் திருப்பதிக்கு சென்றது போன்ற திருப்தியான உணர்வு இருப்பதாகவும் கூறியுள்ளார்.


அனுஷ்காவை பாராட்டிய முன்னணி நடிகர்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்