ads

'வேலைக்காரன்' படத்தின் சில காட்சிகள் - வீடியோ

velaikkaran movie scenes

velaikkaran movie scenes

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறுஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.

24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும்  பணிபுரிந்துள்ள இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என பல திரையுலக வட்டாரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் 360 டிகிரி மேக்கிங் வீடியோ போன்றவற்றை படக்குழு வெளியிட்டது. வேலைக்காரன் படத்திற்கு போடப்பட்ட செட் மக்கள் பார்வைக்கு விரைவில் திறக்க உள்ளது. மேலும் இந்த படத்தில்  இருந்து சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

'வேலைக்காரன்' படத்தின் சில காட்சிகள் - வீடியோ