வேலைக்காரன் 360 டிகிரி செட் மேக்கிங் வீடியோ

       பதிவு : Dec 27, 2017 16:10 IST    
velaikkaran set making video velaikkaran set making video

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறுஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும்  பணிபுரிந்துள்ளார். இந்த படத்திற்கு திரையுலக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த  படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் படக்குழு படத்தை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் 360 டிகிரியில் காண்பிக்கும் விதமாக இந்த படத்தின் கலை இயக்குனர் டி.முத்துராஜ் அவர்கள் படத்தில் பணியாற்றியது குறித்து தெரிவித்துள்ளார்.

 


வேலைக்காரன் 360 டிகிரி செட் மேக்கிங் வீடியோ


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்