ads
வேலைக்காரன் புதிய ப்ரோமோவில் சிவாவின் அதிரடி வசனம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 20, 2017 09:50 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வருகிற 22ம் தேதி வெளிவர உள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த பாடல் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் இப்படத்தில் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் இந்த அதிரடி படத்தின் மூலம் அறிமுகனாவது குறிப்பிடத்தக்கது.
ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணிபிரிந்துள்ள இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என திரையுலக வட்டாரங்கள் இணைந்துள்ளனர். இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர், இசை, செட் மேக்கிங் வீடியோ என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட படத்தின் 2 புதிய ப்ரோமோ வீடியோக்கள் வலைதளத்தில் வெளிவந்தது. இதில் 'எவனா இருந்தாலும் சரி..ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்..' என்று பன்ச் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது மற்றொரு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சிவாவின் 'உலகில் தலைசிறந்த சொல் செயல்' என்ற வசனத்தை பேசுயுள்ளார் இந்த வசனம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.