ads
வேலைக்காரன் படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 16, 2017 09:40 ISTபொழுதுபோக்கு
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 22ம் தேதி வெளிவர உள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஆர்டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்ஜே.பாலாஜி, சதீஸ், ரோபோ சங்கர்,விஜய் வசந்த் உள்பட பல திரை துறை வட்டாரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் மலையாள முன்னனி நடிகர் பாஹத் பாசில் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படத்தின் தகவலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் '2 மணி நேரம் 39 நிமிடம் 41 வினாடி' வரை படத்தினை திரையிட படுவதாகவும் ஞாயிறு கிழமை முதல் படத்திற்கான நுளைவு சீட்டு ஆரம்பமாவதாகவும் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் காமெடிகள் நிறைந்து காணப்படும். ஆனால் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக அதிரடி ஆக்சன் த்ரில்லரில் களமிறங்கியிருப்பதால் அவரின் நடிப்பினை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிக ஆவலோடு இருக்கின்றனர்.
கோவையில் செந்தில் குமரன் திரையரங்கில் வேலைக்காரன் திரைப்படத்தின் முன்பதிவு திங்கள் கிழமை முதல் ஆரம்பம் ஆகும். கரூர் மாவட்டத்தில் வேலைக்காரன் திரைப்படத்தின் முன்பதிவு ஞாயிறு அல்லது திங்கள் கிழமை முதல் ஆரம்பம் ஆகும்.