ads

எழு வேலைக்காரா பாடல் வரிகளின் வீடியோ வெளியீடு

velaikaran movie 3rd lyrics release

velaikaran movie 3rd lyrics release

வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவர் சிவகார்த்திகேயன் தற்பொழுது 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்ஜே. பாலாஜி, சதீஸ், ரோபோ சங்கர் உள்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் மலையாள முன்னணி நடிகர் பஹத் ஃபாசில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.     

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் இசையில் வெளியான கருத்தவன்லாம் கலீஜாம், இறைவா + உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து 'எழு வேலைக்காரா' பாடல் வரிகளின் வீடியோ டிசம்பர் 7-இல் மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.     

எழு வேலைக்காரா பாடல் வரிகளின் வீடியோ வெளியீடு