ads

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதுப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதுப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'சீம ராஜா' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் பிரியாவிடையை கோ லாகலமாக கொண்டாடியது. சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு அமைக்க உள்ள இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் கலக்க போவது யாரு கோதண்டம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். மேலும் வேலைக்காரன், சீம ராஜா போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 14வது படமான இந்த படத்தையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

Photo Credit - @Siva_Kartikeyan (Twitter)Photo Credit - @Siva_Kartikeyan (Twitter)

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்