சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்

       பதிவு : Jun 20, 2018 16:47 IST    
அந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார். அந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார்.

காலா படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது டேராடூனில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், பாபி சிம்ஹா ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு டார்ஜ்லிங் மற்றும் இமய மலை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் இளமையாக மாறியுள்ளார்.

இளமை தோற்றத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடித்து வரும் இந்த படத்தில் தற்போது தேசிய விருதுகளை வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் பணிபுரிந்துள்ள இவர் அந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ளார். தற்போது இந்த படத்தில் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

இவர் ஒரு நடிகராகவும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கோ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏற்கனவே ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் போன்ற படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. 


சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்