ads
விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய படமாம்
வேலுசாமி (Author) Published Date : Jun 14, 2018 17:40 ISTபொழுதுபோக்கு
மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஆக்சன் கலந்த அரசியல் படம் 'தளபதி 62'. இந்த படம் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினி நடிக்க வேண்டியது ஆனால் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு வயது வித்தியாசம் பாராது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு தமக்கான கதையை தேர்வு செய்து நடிப்பாராம்.
அந்த வகையில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி கொண்டிருந்த கபாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போதே அடுத்த படத்திற்கான தேர்வு செய்து வந்தார். அப்போது தான் முன்னணி இயக்குனர்களான ஏஆர் முருகதாஸ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் ரஜினியிடம் கதை கூறியுள்ளனர். இதில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போக என்னுடைய அடுத்த படம் உங்களுடன் தான் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த கதை ரஜினிக்கென்றே உருவாக்கப்பட்ட அரசியல் ஆக்சன் கலந்த கதை.
இதன்பிறகு ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி வந்த போது முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் பிசியாகி விட்டார். இதற்கிடையில் தான் ரஜினி மீண்டும் பா ரஞ்சித்தை அணுகியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து காலா படத்தில் பிசியாகி விட்டனர். இதன் பின்பு ஏஆர் முருகதாஸ் ஸ்பைடர் படத்திற்கு பிறகு ரஜினிக்காக ஆவலுடன் காத்திருந்த போது காலா படத்தில் பிஸியாகவே இருந்தார். இதனால் கதை நம்மிடம் தயாராக இருக்கிறதே என்று விஜயை அணுகியுள்ளார். இந்த படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக படத்தின் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
ஆக்சன், அரசியல், சமூகம் போன்றவற்றை கொண்டு தற்போது உருவாகி வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு இந்த படத்தை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் ரஜினி தனது காலா படத்தின் படப்பிடிப்பின் போதே முருகதாஸ் படம் கைமாறி போன பிறகு இளம் இயக்குனர்களான கார்த்திக் சுப்பராஜ், அருண்பிரபு புருசோத்தமன், அட்லீ ஆகியோரிடம் கதை கேட்டு கார்த்திக் சுப்பராஜ் கதையை தேர்வு செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பும் டார்ஜிலிங்கில் துவங்கியுள்ளது.