குழந்தை அருவி ப்ரனீதியை சந்தித்து பாராட்டிய சூர்யா வீடியோ

       பதிவு : Feb 19, 2018 16:06 IST    
aruvi movie child artist pranita meet suriya and sing munbe vaa song to suriya aruvi movie child artist pranita meet suriya and sing munbe vaa song to suriya

இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'அருவி'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருவியாக அதிதி பாலன் மற்றும் குட்டி அருவியாக ப்ரனீதி ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அவலங்களையும், அவர்கள் இந்த சமுதாயத்தில் படும் துயரத்தையும் மிக சிறப்பாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த படத்தில் வரும் 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சியின் மூலம் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது. இந்த படத்தில் குழந்தை அருவியாக நடித்து பார்வையாளராகளை கொள்ளை கொண்டவர் ப்ரனீதி. இவரின் நடிப்பு திறமையை பாராட்டு வகையில் குழந்தை அருவி ப்ரணிதாவை பாராட்டியுள்ளார். மேலும் சூர்யாவிடம்  'சில்லுனு ஒரு காதல்' படத்திலிருந்து 'முன்பே வா' என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.

என்ன நடந்தாலும் கற்பதை மட்டும் நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார் சூர்யா. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 


குழந்தை அருவி ப்ரனீதியை சந்தித்து பாராட்டிய சூர்யா வீடியோ


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்