ads
நான்காவது வாரமாக வெற்றி நடை போடும் அருவி படத்தின் ரசிகர்கள் கருத்து
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 07, 2018 15:36 ISTபொழுதுபோக்கு
ஒரு கலப்படமான சமூகத்தை சிறப்பாக தோலுரித்து காட்டிருக்கிறது 'அருவி'. சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளையும் அதை ஒரு சிறப்பான நாகரிகம் என்று அறியாமையோடு அதில் வாழ்கின்ற நம்மையும் அதை எண்ணிப்பார்த்து தலைகுனிய செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தோடு அதை பின்பற்றி ஓடுபவர்களை மட்டுமே இங்கு மனிதர்களாக பார்க்கப்படுகிறார்கள் மற்றவர்கள் ஏனோ அப்படி பார்ப்பதில்லை என்று தம் நடிப்பால் உணர்த்தியிருக்கிறார் இப்படத்தின் நாயகி அதிதி பாலன்.
தற்போதைய காலகட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை இச்சமூகம் ஒரு அருவெறுப்பான பிராணிகளாகவும், ஒரு பசி தீர்க்கும் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கதைக்குள் புகுத்தி பார்ப்பவர்க்கு பாடம் புகட்டி இருப்பது இப்படத்தின் சிறப்பு. பிறர் சொல்லை கேட்டு தாம் பெற்ற பிள்ளைகளையே சந்தேகப்பட்டு அவர்களை நிராகரிக்கும் பெற்றோருக்கு இப்படம் ஒரு சிறப்பான பாடம். சமூகத்தில் பொதுநலம் காலப்போக்கில் மறைந்து சுயநலம் மட்டுமே நன்கு பெருகியிருப்பதை வெளிப்படையாக காட்டியிருக்கிறது. நாம் எவ்வகை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்பவர்களை சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
பெண்ணின் வலிமையையும் பெருமையையும் போற்றும் படம் 'அருவி'. சிறப்பான சமூகத்தில் வாழ்கின்றோம் என்று கனவில் மிதக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மொத்தத்தில் இப்படம் புரிதலுக்கும் எதார்த்தத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் 'அருவி'.