ads

'அருவி' ஆஸ்மாவின் காப்பி அல்ல - சமூக ஆர்வலர்கள் கருத்து

aruvi asmaa movie reviews

aruvi asmaa movie reviews

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில் 'அருவி' படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. இந்த படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான 'ஆஸ்மா' என்ற எகிப்தியன் படத்திலிருந்து காப்பி அடித்தாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர். இவ்விரு படங்களின் கதையை பற்றி பாப்போம். 

ஆஸ்மா - "ஆரம்பத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்மாவிற்கு பித்தப்பையிலும் பிரச்சனை ஏற்படுகிறது. எய்ட்ஸை விட பித்தப்பை வீரியம் அதிகமானதால் சிகிச்சை பெற அனைத்து மருத்துவமனைகளிலும் ஏறி இறங்குகிறார். ஆனால் இவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். இவருடைய நிலை அவருடைய மகளை தவிர சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் நரக வேதனை படும் ஆஸ்மாவிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வருகிறது. முதலில் மறுத்தாலும் இதன் மூலம் உதவி கிடைக்கும் என்ற நோக்கில் நோய்க்கான காரணத்தையும் கூறமாட்டேன், முகத்தையும் காட்டமாட்டேன் என்ற கண்டிசன் வைத்து ஒப்பு கொள்கிறார். இறுதியாக இந்த நிகழ்ச்சி மூலம் உதவி கிடைத்துவிடும் என்பது போல் இந்த படம் முடியும். மேலும்  இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. உண்மை சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண் உதவி கிடைக்காமல் இறந்து விடுவார்."  

அருவி - "தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் அருவி குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய தோழியின் நட்பால் பார்ட்டி, பப் என மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறார். ஒரு நாள் அவரது உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அவரை பரிசோதித்த பிறகு அவருக்கு ஹச்ஐவி தோற்று நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவருடைய பெற்றோர்கள் அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். தகாத வழியில் போனதால் தான் இவருக்கு இந்த நோய் வந்ததாக பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். பெற்றோரால் துரத்திவிடப்பட்ட இவர் மேன்ஷனில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார். சிலர் இந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாட நினைக்கும் போது 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற நிகழ்ச்சியில் நியாயம் கேட்க செல்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு மீடியாவை பழிவாங்க துப்பாக்கியை கையில் எடுக்கிறார். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். இதனை அடுத்து இவர் மீது மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறார். இவ்வாறாக வீட்டை விட்டு வெளியேறியது முதல் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? எப்படி விடுதலை செய்யப்படுகிறார்? என்பதே படத்தின் மீதி கதை."

இவ்விரு படங்களுக்கும் ஒற்றுமை தொற்று நோயும் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் ஏமாற்றப்படுவது தான். இந்த 'அருவி' படத்தில் இடம்பெறும் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற நிகழ்ச்சியினால் தான் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த எய்ட்ஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றால் 'அருவி' படம் காப்பி அடிக்கப்பட்ட படம் என்று தெரிவித்து வருகின்றனர். அப்படியானால் தமிழ் படங்கள் அனைத்துமே காப்பி தான். அனைத்து படங்களிலுமே காதல், பாசம் ,நட்பு, சண்டை போன்ற அனைத்து காட்சிகளும் இடம் பெறுகிறது. இந்த காட்சிகள் நடிகர் எம்.ஜி.ஆர்.காலத்திலே வந்துவிட்டது. இதே காட்சிகளில் நவீனம் என்ற பெயரில் எடுக்கவில்லையா. ஆக போட்டி, பொறாமை குணம் மற்றும் என்னதான் நன்றாக இருந்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த படம் மாபெரும் வெற்றியை படைத்துள்ளது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

'அருவி' ஆஸ்மாவின் காப்பி அல்ல - சமூக ஆர்வலர்கள் கருத்து