ads

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தின் தகவல்

surya new movie updates

surya new movie updates

சூர்யா நடிப்பில் தற்பொழுது வெளிவரவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர். இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல  திரையுலக வட்டாரங்கள்  இப்படத்தில் இணைந்துள்ளனர்.     

இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா தனது 36வது படத்தினை செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து இவர் 'இறுதிச்சுற்று' சுதா, 'மாநகரம்' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. தற்பொழுது வந்த தகவலின்படி அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சூர்யா இணைய இருப்பதாக தெரிகிறது. இந்த தகவலை சினிமா துரையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.          

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தின் தகவல்