ads

சுட்டு பிடிக்க உத்தரவு கூட்டணியில் இணையும் துருவங்கள் பதினாறு கலைஞர்கள்

suttupidikka utharavu movie

suttupidikka utharavu movie

இயக்குனர் சுசீந்திரன் எதார்த்தமான பல படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல் முறையாக 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் 'துப்பறிவாளன்' இயக்குனர் மிஸ்கின், நடிகர் விக்ராந்த் முக்கிய வேடத்தில் இணைத்துள்ளனர். இப்படத்தில் இரண்டு முக்கிய இயக்குனர்கள் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.    

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், போக்கிரி ராஜா போன்ற வெற்றி படத்தினை இயக்கிய  ராம்பிரகாஷ் ராயப்பா இந்த புது படத்தினை இயக்கவுள்ளார். மேலும் படத்திற்கான சிறப்பு பூஜையும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராம்மோகன் தயாரிக்கவுள்ள இப்படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிவந்ததோடு, கலைஞர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். அதில் சுஜித் சாரங் ஒளிப்பதிவளராகவும் , ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராகவும் இணைத்துள்ளனர். மேலும் ஜேக்ஸ் பீஜாய் இப்படத்தில் இசையமைக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளனர். இவர் மூவரும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கின்றனர்.        

 

சுட்டு பிடிக்க உத்தரவு கூட்டணியில் இணையும் துருவங்கள் பதினாறு கலைஞர்கள்