சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா

       பதிவு : Apr 12, 2018 17:55 IST    
தர்மதுரை படத்திற்கு தமன்னா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார். தர்மதுரை படத்திற்கு தமன்னா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார்.

தற்போது மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரரான உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை சிரஞ்சீவி மகன் மற்றும் நடிகரான ராம் சரண் தனது கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

 

இந்த படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 151வது படமாகும். மேலும் இந்த படம் தமிழ் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் அறிமுகமாகவுள்ள முதல் படம். தற்போது இந்த படத்தில் நயன்தாராவுக்கு பிறகு மற்றொரு நாயகியாக தமன்னா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 'பாகுபலி' படத்திற்கு பிறகு தமன்னா மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தமன்னா, 'தர்மதுரை' படத்திற்கு  பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்