ads
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்
வேலுசாமி (Author) Published Date : Apr 27, 2018 18:08 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு மொழியின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, 1979-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திரைத்துறையில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது வரை 33 படங்கள் வெளியாகியுள்ளது. இவருடைய நடிப்பில் இறுதியாக 'பரத் அனே நேனு' என்ற படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனையை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, சுகுமார், சந்தீப் வங்கா மற்றும் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இவருடைய படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுவதால் இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழிலும் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவரை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் இயங்கி வரும் மடமே தஸாட்ஸ் (Madame Tussauds) என்ற அருங்காட்சியகத்தில் இவருடைய மெழுகு சிலை இடம்பெற உள்ளது. மடமே தஸாட்ஸ் (Madame Tussauds) என்ற நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இந்திய கிளையானது சமீபத்தில் டெல்லியில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் பிரபலங்களை மெழுகு சிலையில் வடிவமைத்து வருகிறது.
டெல்லியில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் சச்சின், கபிலதேவ், சத்யராஜ் மற்றும் பிரபாஸ் போன்ற பிரபலங்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இவர்களை தற்போது தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் சிலையும் இடம்பெற உள்ளது. இதற்காக தனது உருவத்தை அளவெடுக்க மகேஷ் பாபு அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். மெழுகு சிலை இடம்பெறுவதில் மகிழ்ச்சி எனவும் இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் நன்றி என தனது டிவிட்டரில் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Super happy to be a part of the prestigious Madame Tussauds :) :)
— Mahesh Babu (@urstrulyMahesh) April 26, 2018
Thanks to the team of artists for their attention to detail. Incredible! pic.twitter.com/fyZHlxJE6k