ads
நடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை
வேலுசாமி (Author) Published Date : Apr 02, 2018 15:47 ISTபொழுதுபோக்கு
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, இடம்பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.
இதில் ‘ஜூங்கா’ படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கல்லில் நடந்து வருகிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாக திடீர் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பலர் தெரிவித்து வருகின்றனர். ஒரு மாதமாக புதிய படங்களை திரைக்கு கொண்டு வரவில்லை. சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.
இந்த தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் வேலை நிறுத்த அறிவிப்புக்கு முன்பே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும், தெரிவித்துள்ளனர். தற்போது தயாரிப்பாளர் சங்கம் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.