ads
தல அஜித் ரசிகர்களின் புதுவித ட்ரெண்ட்
ராதிகா (Author) Published Date : Feb 05, 2018 12:56 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் பல வெற்றி படங்களை திரையுலகில் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களால் வலைதளத்தின் மூலம் உலகளவில் ட்ரெண்ட்டான பிறகே திரையில் வெளிவருவது அனைவரும் அறிந்த தகவல். மேலும் தல அஜித்திற்கு தமிழ் திரையுலகை போன்று தெலுங்கிலும் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்துள்ளார். ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரையுல நட்சத்திரங்களுக்கும் பிடித்த ஒரு நபராக வளம் வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் தனது 58வது படமான 'விசுவாசம்' படத்தின் ட்ரெண்டை தொடர்ந்து ரசிகர்கள் புதுவித ட்ரெண்டை கையாண்டு வருகின்றனர்.
அதில் கடந்த 2015ம் ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் அதிரடி காவல் துறை அதிகாரியாக வளம் வந்த தல அஜித்தின் 55வது படமான 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டு கொண்டாட்டத்தை இன்று (5.2.2018) எட்டியுள்ளது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் '3YRS OF CLASSY YENNAIARINDHAAL' என்ற புதுவித டேக்கை உருவாக்கி வலைதளத்தில் பரப்பு வருகின்றனர். இந்நிலையில் இந்த சிறப்பான புதுவித டாக் 9000 க்கும் அதிகமான ட்வீட்ஸ் பெற்று உலகளவு ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும் கடந்த 2013ம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் 'ஆரம்பம்'. இப்படம் கன்னடத்தில் 'தீரன்' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த படத்தின் 50வது நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக '#AJITHsDheeraBB50Days' என்ற டேகை கிரியேட் செய்து வலைத்தளத்தில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.