தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்

       பதிவு : Mar 30, 2018 17:53 IST    
திரையரங்கு உரிமையாளர்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் விஷால் அறிக்கை விடுத்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் விஷால் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை சமீபத்தில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது விஷால் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் "தியேட்டர் கட்டணத்தால் பட தயாரிப்பாளர்களுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை, இதனால் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம். மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். பொது மக்களின் வசதிக்காகவும், சினிமா துறையை ஒழுங்குபடுத்தவும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வரும் புதன் கிழமை அன்று தயாரிப்பாளர்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தி முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே செல்வமணி, டிக்கெட் கட்டணம் ஏழை மக்களும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அரசு, திரையரங்குகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்