தளபதி 62 படப்பிடிப்பில் விஜயுடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்

       பதிவு : Apr 28, 2018 11:53 IST    
சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் தளபதி 62 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் தளபதி 62 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் படம் 'தளபதி 62'. விஜய், இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தெறி, மெர்சல் என வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதன் பிறகு தன்னுடைய 62வது படத்திற்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த 'ஸ்பைடர்' படத்திற்கு நல்ல வசூல் கிடைக்காவிட்டாலும் படத்தின் கதைக்கு நல்ல வரவேற்புகள் இருந்தது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு உணரவைப்பார் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அந்த வகையில் தற்போது உருவாகி வரும் 'தளபதி 62' படமும் ரசிகர்களுக்கு உணர்ச்சி பூர்வமான சமூக கருத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் இருந்த போதிலும் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் நடத்தி வருகின்றனர். விவசாயம் சார்ந்ததாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் அரசியல்வாதிகளை எதிர்த்து போராட உள்ளார்.

 

இந்த படத்தில் அரசியல்வாதிகளாக நடிகர் ராதாரவி, பால கருப்பையா மற்றும் நடிகை வரலட்சுமியும் நெகட்டிவ் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியலை எதிர்க்கும் விஜய்க்கு பொது மக்களும் இளைஞர் சமுதாயமும் ஆதரவாக நிற்க உள்ளனர். இதற்கான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவருடன் பைக் ஒட்டி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


தளபதி 62 படப்பிடிப்பில் விஜயுடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்