விஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்

       பதிவு : Apr 19, 2018 10:07 IST    
திருப்பாச்சி, ஆதி, காவலன் போன்ற படங்களுக்கு பிறகு லிவிங்ஸ்டன் தளபதி 62 படத்தில் நான்காவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார். திருப்பாச்சி, ஆதி, காவலன் போன்ற படங்களுக்கு பிறகு லிவிங்ஸ்டன் தளபதி 62 படத்தில் நான்காவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜயின் 62 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் பிரச்சனை இருந்த போதிலும் இந்த படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் வரலட்சுமி, ராதா ரவி, பால கருப்பையா ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் வில்லியாக அரசியல்வாதியாக விஜய்யை எதிர்கொள்கிறார் வரலட்சுமி.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேசுக்கு அப்பா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் லிவிங்ஸ்டன் நடிக்க உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் 1982-காலங்களில் இருந்தே நடித்து வருகிறார். இவர் தற்போது வரை 35 வருடங்களாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர இவர் திரைக்கதை எழுத்தாளராக காக்கி சட்டை, அறுவடை நாள், கன்னி ராசி, சுந்தர புருஷன் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் அப்பா, அண்ணன், தம்பி, நண்பன் போன்ற அணைத்து கதாபாத்திரங்களிலும் இவர் சிறப்பானதாகவும், காமெடியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி நடித்து வருகிறார். 60 வயதான இவருடைய நடிப்பில் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், பேரன்பு போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து தளபதி 62 படத்தில் இணைந்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூலம்  இவருடைய மகள் ஜோவிதா தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி, ஆதி, காவலன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக விஜய் படத்தில் இணைந்துள்ளார்.

 


விஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்