ads
தளபதி 62 படத்தில் முழுநேர அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார்
வேலுசாமி (Author) Published Date : Apr 16, 2018 16:52 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'தளபதி 62'. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் 'பைரவா' படத்தை தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இசையமைத்து வருகிறார். விவசாயம் சார்ந்த, சமூக கருத்து கொண்டதாக உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் நடைபெறும் போதும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, யோகி பாபு, பாலா கருப்பையா, பிரேம் குமார் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராதாரவி, கருப்பையா ஆகியோர் அரசியல் வாதிகளாக நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் இணைந்து வரலட்சுமியும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முழுநேர அரசியல் வாதி கதாபாத்திரத்தில் வரலட்சுமி வலம் வரவுள்ளார். சிறு சிறு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான முறையில் நடித்து வரும் வரலட்சுமி இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் படத்தின் முக்கியமான ஆக்சன் அதிரடியான திருப்பங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.