48 மணிநேரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் வெல்வெட் நகரம்

       பதிவு : Apr 12, 2018 12:22 IST    
வரலட்சுமி சரத்குமாரின் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலட்சுமி சரத்குமாரின் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் வரலட்சுமி சரத்குமார், 'சத்யா' படத்திற்கு பிறகு தளபதி 62, நீயா 2, சண்டக்கோழி 2, மாரி 2, எச்சரிக்கை, கன்னி ராசி, சக்தி, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள அம்மாயி, மதகஜராஜா படங்கள் சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. சிம்புவுடன் இணைந்து 'போடாபோடி' படத்தின் மூலம் 2012-இல்அறிமுகமான வரலட்சுமி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் 10 படங்களில் நடித்துள்ளார்.

சிறு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் நடிகை வரலட்சுமிக்கு திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் அருண் கார்த்திக், மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார்.

 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் வரலட்சுமி மதுரை பெண் கதாபாத்திரத்தில் பத்திரிகையாளராக நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதை கொடைக்கானல் மற்றும் சென்னையில் 48 மணிநேரங்களில் நடந்த கதையை மையமாக கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பும் சென்னை மற்றும் கொடைக்கானலில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'வெல்வெட் நகரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


48 மணிநேரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் வெல்வெட் நகரம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்