ads

1 மில்லியனை தாண்டிய த்ரிஷாவின் மோகினி ட்ரைலர்

mohini movie release

mohini movie release

தனுஷின் 'கொடி' படத்தினை தொடர்ந்து நடிகை த்ரிஷா 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை' போன்ற த்ரில்லர் படங்களிலும் '1818',' 96 'மலையாளத்தில் 'ஹேய் ஜூட்' போன்ற பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் ரமணா மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி வந்த படம் 'மோகினி'. மார்வெல் ஒர்த் ப்ரொடக்சன் சார்பில் எல் லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பாளராகவும் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகவும் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் வெளியிட்ட ட்ரைலர் ரசிகர்களை பயத்தில் மிரளவைக்கும் அளவிற்கு த்ரில்லர் அதிகளவு இடம் பெற்றிருந்தது. இந்த ட்ரைலரை 1மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையை கடந்திருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா இரு வேடங்களில் நடிப்பதாகவும் பழிவாங்கும் உணர்ச்சி அதிகளவு இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது வரை பார்த்திராத அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய த்ரிஷ்வின் ஜோடியாக பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னணி நடித்துள்ளார்.   

1 மில்லியனை தாண்டிய த்ரிஷாவின் மோகினி ட்ரைலர்