ads

த்ரிஷா தொடங்கும் 'பரமபதம் விளையாட்டு'

த்ரிஷா தொடங்கும் 'பரமபதம் விளையாட்டு'

த்ரிஷா தொடங்கும் 'பரமபதம் விளையாட்டு'

15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கும் த்ரிஷா இப்பொழுதும் பல படங்களில் நடித்து வருகிறார்.அதிரடி த்ரில்லர் படங்களில் களமிறங்கிய த்ரிஷா, தனி ஒருவன் அரவிந்த் சாமியுடன் இணைந்து `சதுரங்கவேட்டை-2' படத்தில் நடித்தத்தினை தொடர்ந்து மோகினி, கர்ஜனை, 1818, 96, மலையத்தில் ஹே ஜுட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

இந்நிலையில் புதுமுக இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் 'பரமபதம் விளையாட்டு' என்ற படத்தில் நடித்து வருகிறார். 24 HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா, ரிசார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த அவ்ரங்கசீபின் ஆற்காடு கோட்டையில்  நடைபெறுகிறது. இந்த கோட்டை ராபர்ட் கிளைவின் கெஸ்ட் ஹவுஸ் எனவும் கூறப்படுகிறது. இந்த கோட்டையில் முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சி தற்போது ராபர்ட் கிளைவின் கெஸ்ட் ஹவுசில் நடந்து வருகிறது.

அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். த்ரிஷா இப்பொழுது நடித்து வரும் படங்கள் எல்லாம் அதிரடியாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைவதால், இப்படமும் அதன் அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.        

த்ரிஷா தொடங்கும் 'பரமபதம் விளையாட்டு'