ads
நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் அடுத்தடுத்த படங்கள்
வேலுசாமி (Author) Published Date : Jan 22, 2018 15:31 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் 2012-இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். இவர் சொந்தமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து விஜய் நடிப்பில் 'குருவி' படம் முதன் முதலாக வெளிவந்தது. இதனை தொடர்ந்து ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, ஒருகல் ஒரு கண்ணாடி, நீர் பறவைகள் போன்ற படங்கள் இவருடைய தயாரிப்பில் வெளிவந்தது. மேலும் இவருடைய விநியோகத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ போன்ற படங்கள் வெளியானது.
இவர் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன், மனிதன் போன்ற படங்கள் வெளியானது. இவர் நடிப்பில் வெளிவந்த 'மனிதன்' படம் தற்போது வரை பேசும் படமாக, மாபெரும் பெருமையை இவருக்கு தேடி தந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் 'இப்படை வெல்லும்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்சன் த்ரில்லர் படமாக தேர்வு செய்யப்பட்டு பென்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இவருடைய நடிப்பில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் 'நிமிர்' படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 26-இல் வெளியாகவுள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'நிமிர்' படம் 'மனிதன்' படத்திற்கு பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெயர் சொல்லும் படமாக நிச்சயம் அமையும் என்று திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது. இவர் நிமிர் படத்தை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக புதுமுக இயக்குனரான பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் தற்போது விஷாலின் 'இரும்புத்திரை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு பிஎஸ் மித்ரன் உதயநிதியுடன் இணையவுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீயின் இணை இயக்குனராக பணிபுரிந்த இநோக் என்பவருடன் இணைய உள்ளார். விரைவில் இந்த படத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தை தயாரிக்க புது முக தயாரிப்பாளர் முன்வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.