ads
முதன் முதலாக காக்கிசட்டை அணியும் உதயநிதி
புருசோத்தமன் (Author) Published Date : Dec 21, 2017 16:29 ISTபொழுதுபோக்கு
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் ப்ரியதர்சன் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள படம் 'நிமிர்'. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைவதாக டிவிட்டரில் தெரிவித்தார். உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்த படத்திற்கு 'கண்ணே கலைமானே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-இல் தொடங்க உள்ளது. இதனை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் 'இரும்பு திரை' படத்தினை இயக்கி வரும் இயக்குனர் பிஎஸ் மித்ரனுடன் இணையவுள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையில் உருவாகவுள்ள இந்த படத்தில் உதயநிதி காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் உதயநிதி முதன் முதலாக காக்கி சட்டை அணியவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.