மீண்டும் ரீ மேக் படத்தில் இணையும் உதயநிதி ஸ்டாலின்

       பதிவு : Jan 21, 2018 11:51 IST    
udhayanidhi stalin new remake movie udhayanidhi stalin new remake movie

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த 'இப்படை வெல்லும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டில் மலையாள திரையுலகில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற தலைப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் ரீ- மேக் தற்பொழுது 'நிமிர்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரித்து வரும் இப்படத்தில் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளிவர உள்ள இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்பட பல திரைப்பட பிரபலங்கள் இணைந்துள்ளனர்.     

இந்த படத்திற்கு முன்னதாகவே அமீத் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்த 'மனிதன்' படத்தின் மூலம் ஹிந்தி ரீ - மேக்கில்  உதயநிதி நடித்திருந்தது குறிப்பிட தக்கது. தற்பொழுது மற்றொரு மலையாள ரீ-மேக் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். இந்த படம் ஒமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் மலையாள திரையுலகில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த 'ஹேப்பி வெட்டிங்' திரைப்படமாகும். இந்த படத்தில் சிஜு வில்சன், ஷரபியுதீன், சோப்பின் ஷாஹிர், ஜஸ்டின் ஜான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தினை இயக்குனர் ஒமர் லூலூ தமிழில் ரீ - மேக் செய்யவுள்ளார். இந்த  ரீ - மேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக தகவல் வந்திருந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஒமர் லூலூ அவரது பேஸ்புக்கில் உதயநிதியுடன் இணைந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.         

 

udhayanidhi new malayala remake movieudhayanidhi new malayala remake movie

மீண்டும் ரீ மேக் படத்தில் இணையும் உதயநிதி ஸ்டாலின்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்