குடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்

       பதிவு : Jan 09, 2018 17:59 IST    
nimir movie release on january 26th nimir movie release on january 26th

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'இப்படை வெல்லும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது உதயநிதி மலையாள ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த ரீமேக் படத்தில் நாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார். முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.   

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டதினை தொடர்ந்து அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்புக சிவா இணைந்து இசையமைத்துள்ள 'நெஞ்சில் மாமழை' என்ற சிங்கிள் பாடலை 'இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இதற்கு அடுத்த படியாக தற்போது வெளிவந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை குடியரசு தினத்தினை முன்னிட்டு வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் அதே நாளில் விஷாலின் 'இரும்புத்திரை', ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', அனுஷ்காவின் 'பாகமதி' போன்ற படங்கள் வெளிவர உள்ளது. இந்த படங்களுக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினின் 'நிமிர்' படம் களமிறங்கவுள்ளது.

 


குடியரசு தின பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் ரீமேக் படம்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

தங்கராஜாசெய்தியாளர்