ads

அண்ணாதுரை படத்திற்கு சர்ச்சை, ரெய்டு - உதயநிதி ஸ்டாலின்

அண்ணாதுரை படத்திற்கு சர்ச்சை, ரெய்டு - உதயநிதி ஸ்டாலின்

அண்ணாதுரை படத்திற்கு சர்ச்சை, ரெய்டு - உதயநிதி ஸ்டாலின்

பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எமன், சைத்தான் போன்ற படங்களை தொடர்ந்து அண்ணாதுரை, காளி படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.    

இந்த நிகழ்ச்சியில் சில சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த படம் மிக பெரிய ஹிட்டாகும். ஏன்னென்றால் படத்தின் தலைப்பு அண்ணாதுரை, நல்ல ஒரு பவர் புல்லனா தலைப்பு. இந்த தலைப்பு வைத்ததற்கு படத்தினை வெளியிடப்படும் நேரத்தில் இரண்டு நபர்கள் சர்சைகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். இதனை யாரையும் குறிப்பிடும் நோக்கத்தில் சொல்லவில்லை என்று பேசியதினை தொடர்ந்து படம் நல்ல வெற்றி பெற்றால் வருமான வரி துறை சோதனை எல்லாம் வரும் ஜாக்கிரதையாக இருங்க என்று கூறினார்.      

மேலும் உதயநிதி ஸ்டாலின் நாங்க எல்லாம் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதற்கே பயப்படுவோம் ஆனால் விஜய் ஆண்டனி படத்தையே போட்டு காட்டுறாரு, அது அவரின் நம்பிக்கை என விஜய் ஆண்டனியை பெருமைப்படுத்தினார்.  

அண்ணாதுரை படத்திற்கு சர்ச்சை, ரெய்டு - உதயநிதி ஸ்டாலின்