ads
உதயநிதியின் கண்ணே கலைமானே படத்தின் புதிய பாடல் பிறந்தது
ராதிகா (Author) Published Date : Jan 20, 2018 16:45 ISTபொழுதுபோக்கு
ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இது கதிரவன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளம் ரீமேக் படமான 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தினை குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு வருகிற 26ம் தேதி வெளிவர உள்ளது.
இந்த படத்திற்கு அடுத்த படியாக உதயநிதி ஸ்டாலின் 'கண்ணே கலைமானே' என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்து நடிக்கவிருக்கும் இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக இணைந்துள்ளார். இவர்களின் ஜோடி முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. மேலும் இந்த படத்தினை இயக்குனர் சீனுராமசாமி இயக்கிவருகிறார். இவர் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருப்பது குறிப்பிட தக்கது.
இந்த படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவர்களது கூட்டணி இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. மேலும் இவர்களின் கூட்டணியில் தற்பொழுது ஒரு பாடல் முடிவடைந்து இருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி அவர்களது ட்விட்டரில் பின்வருமாறு பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.
''உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடல் பிறந்தது, யுவன் சங்கர் ராஜா வைரமுத்து கூட்டணி மூன்றாவது முறையாக உங்கள் வாழ்த்துக்களுடன் இணைகிறது''.
உதய நிதி ஸà¯à®Ÿà®¾à®²à®¿à®©à¯ நடிகà¯à®•à¯à®®à¯
— Seenu Ramasamy (@seenuramasamy) January 20, 2018
கணà¯à®£à¯‡ கலைமானே படதà¯à®¤à®¿à®©à¯
à®®à¯à®¤à®²à¯ பாடல௠பிறநà¯à®¤à®¤à¯,
யà¯à®µà®©à¯ சஙà¯à®•à®°à¯ ராஜா வைரமà¯à®¤à¯à®¤à¯ கூடà¯à®Ÿà®£à®¿ மூனà¯à®±à®¾à®µà®¤à¯ à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®• உஙà¯à®•à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯à®Ÿà®©à¯ இணைகிறதà¯. pic.twitter.com/iSvDOlbXa3